Gallery

gallery-image

ஆகஸ்ட் 15 ஆளுநர் PMJF. A.சவரிராஜ் அவர்களின் முசிரி லயன்ஸ் சங்கத்திற்கு வரவேற்பு நிகழ்வு.

gallery-image

இன்று மதியம் 2 மணி அளவில் தொட்டியம் பவள கடைவீதியில் வசிக்கும் சித்ரா என்பவரின் தாயார் கமலம் அம்மாள் அவர்களின் இரு கண்கள் நமது முசிறி லயன்ஸ் சங்கத்தின் சார்பாக தானமாக பெறப்பட்டது. கண்களை தானமாக வழங்கி இருவர் வாழ்வில் ஒளி ஏற்றிய அம்மையார் அவர்களின் குடும்பத்தாற்க்கு முசிரி லயன்ஸ் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்களையும், அம்மையார் அவர்களின் ஆண்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம். விழிகள் தானமாக பெற உறுதுணையாக இருந்த அன்புக்குரிய அண்ணன் லயன்.ரகுநாதன், லயன்.ஸ்ரீதர்(எ) முத்து வெங்கடாசலம், லயன்.B.கார்த்திக் (தொட்டியம்), லயன்.A.சரவணன் (தொட்டியம்) அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

gallery-image

காலை 7.45க்கு கண் தானம், இரத்ததானம்(திருச்சி ரோடு) ஆளுநரின் அறிய திட்டம், தலைக்கவசம்(உழவர் சந்தை) பற்றிய விழிப்புணர்வு பலகை திறக்கப்பட்டது.

gallery-image

சுதந்திர தின விழா கொடியேற்றம் மற்றும் ஏழு ராணுவ வீரர்களை கௌரவித்தல் விழா, முசிறி செல்லம்மாள் பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

gallery-image

உடல் தானம் வழங்கிய கிரிஜா பாய் அவர்களின் நினைவாக அவரது குடும்பத்தார் கௌரவிக்கப்பட்டார்கள். பள்ளித் துறையில் சிறந்து விளங்கும் தலைமை ஆசிரியர் திரு.பல்தசார்( அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முசிறி) அவர்கள் கௌரவிக்கப்பட்டார். சிலம்பம்/கராத்தே பயிற்சியில் சிறந்து விளங்கும் கராத்தே.நடராஜன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கிய சச்சின், ஜோஸ்வா(டென்னிஸ்) R.M. அஜெய்(கிரிக்கெட்). கௌரவிக்கப்பட்டார்கள். மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றும் காணும் மா.லோகநாதன். அறம் மகிழ் அறக்கட்டளை. காட்டும்புத்தூர். அவர்கள் கௌரவிக்கப்பட்டார். கண் தானம் எடுக்கும் சேவையில் சிறந்து விளங்கும் இருதயசாமி அவர்கள் கௌரவிக்கப்பட்டார். முசிறியை நேசிப்போம் சேனலில் முசிரி பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் சேவையில் சிறந்து விளங்கும் செந்தில்குமார் மற்றும் ரமேஷ் அவர்கள் சேவை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மாங்காரப்பேட்டை இளையநிலா கலைக்குழு முருகன் அவர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டது.

gallery-image

மாவட்ட ஆளுநர் PMJF.A.சவாரிராஜ் அவர்களின் அலுவல் விழா முசிரி லயன்ஸ் சங்கத்தில் நடைபெற்ற இனிமையான தருணம்.

gallery-image

விதமாக *கல்வி திலகம்* என்ற ஆசிரியர் தின விழா விருது 324F ஆளுநர் PMJF சவரிராஜ் மற்றும் சௌடாம்பிகா குழுமம் தாளாளர் மதிப்பிற்குரிய ஐயா.ராமமூர்த்தி அவர்களின் கரங்களால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இடம்:சௌடம்பிகா பள்ளி, தொட்டியம்.

gallery-image

இதில் முசிறி லயன்ஸ் சங்கத்தின் சிறப்பு அழைப்பாளராக தலைவர், செயலர், பொருளர் கலந்து கொண்டு போதைப் பொருள் மற்றும் கைபேசியின் தாக்கம் குறித்தும் அதற்கு அடிமையாகாமல் எவ்வாறு மீண்டு எழுவது என்பது பற்றியும், மாணவர்களின் மனரீதியான பிரச்சனைகளுக்கு இலவச ஆலோசனை எண்கள், எவ்வாறு பழக்கத்திலிருந்து மீண்டு எழுவது என்பது பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இடம்: GV ITI முசிரி. நல்லதொரு நிகழ்வினை ஏற்பாடு செய்த அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதுகலை சமூக பணித்துறை இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

gallery-image

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு 2024 ம் ஆண்டு தேர்ச்சி பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ/ மாணவிகளை பாராட்டி எமது முசிறி லயன் சங்கம் புத்தகம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டிய தருணம். வழங்கியவர்: மெஸ்.பாலு (எ)P.பாலசுப்ரமணியன் அவர்கள்(நிர்வாக இயக்குனர்).

gallery-image

முசிரி லயன்ஸ் சங்கத்தின் சார்பாக 50 நபர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது. வழங்கியவர்: M.பாலசுப்ரமணியன் அவர்கள் (வட்டாரத் தலைவர்).

gallery-image

இன்று முசிறி லயன்ஸ் சங்கம், சேருகுடி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.த.கலாவதி அவர்கள், தலைமை ஆசிரியை திருமதி. விஜயலட்சுமி அவர்கள் தலைமையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நல் விருந்து மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மாணவ மணிகள் சத்தான காய்கறி, இனிப்பு, முட்டை உண்ணு மகிழ்ந்தனர். சிறந்த உணவு வழங்கியவர் திட்ட இயக்குனர் லயன்.த.அசோக்குமார்.

gallery-image

இன்று மதியம் 12.30 மணி அளவில் தொட்டியம் வடக்கு வீதி K.பார்வதி அம்மாள் அவர்களின் இரு கண்கள் நமது முசிறி லயன்ஸ் சங்கத்தின் சார்பாக தானமாக பெறப்பட்டது. கண்களை தானமாக வழங்கி இருவர் வாழ்வில் ஒளி ஏற்றிய அம்மையார் அவர்களின் குடும்பத்தாற்க்கு முசிரி லயன்ஸ் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்களையும், அம்மையார் அவர்களின் ஆண்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம். விழிகள் தானமாக பெற உறுதுணையாக இருந்த அன்புக்குரிய அண்ணன் லயன்.ஸ்ரீதர்(எ) முத்து வெங்கடாசலம் அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

gallery-image

சேவை திட்டம் - 25 இன்று காலை 10 மணி அளவில் முசிறி லயன்ஸ் சங்கம், ஸ்ரீ பாலாஜி பெட்ரோல் பங்க்(ஸ்ரீ கிருஷ்ணகுமார் அறக்கட்டளை) மற்றும் சமூக ஆர்வலர்கள், ஊர் மக்கள், பள்ளி குழந்தைகள் இணைந்து 550 பனை விதைகள் நடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இடம்:அழகாப்பட்டி ஏரி.

gallery-image

இன்று மதியம் முசிறி லயன் சங்கம் நடத்திய "டிஜிட்டல் கல்வி அறிவு" குறித்து கருத்தரங்கம் துளையாநத்தம் ஆ.தி.நலப்பள்ளி நாட்டு நலப்பணிதிட்ட மாணவர்களுக்கு கருத்தரங்கம் மிகசிறப்பாக நடைபெற்றது. விழாவில் டிஜிட்டல் கல்வி அறிவு குறித்து செல்வி.K.மதுமிதா.ME., மற்றும் செல்வி.A.சங்கீதா MCA., அவர்கள்(Software developers, CHADURA pvt ltd, Musiri) அருமையாக மாணவர்களுக்கு எடுத்துறைத்தனர். மிக எளிமையான முறையில் மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வியின் மாறுதல், அதனை மேம்படுத்தும் வகை குறித்து முசிரி லயன்ஸ் சங்க வட்டார தலைவர் M.பாலசுப்ரமணியன் அவர்கள் எடுத்துரைத்தார். இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜம்புநாதபுரம்.

gallery-image

சேவை திட்டம்- 26 இன்று முசிறி லயன் சங்கம் சார்பாக சீனிவாசநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு சமச்சீர் உணவு மற்றும் சுகாதாரமான நீர் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கருத்தரங்கம் தொடர்பாக டாக்டர் கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அய்யர்மலை.பேராசிரியர் முனைவர் திருமதி. புவனேஸ்வரி அவர்கள் சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது, மேலும் மாணவர்கள் பல கேள்விகளையும் கேட்டு அறிந்து கொண்டனர். நல்லதொரு கலந்துரையாடல் சிறப்புடன் அமைந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் லயன்.ரகுநாதன், பொருளர் க.செந்தில்குமார், உறுப்பினர் லயன். சுரேஷ்(தொட்டியம்). ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

gallery-image

முருகா மண்டலமாநாடு தொடர்பாக முதல் ஆலோசனை கூட்டம் மண்டல தலைவர் லயன்.Dr.முருகேசன் அவர்கள் தலைமையில் தாத்தா மெஸ், பெட்டவாய்த்தலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

gallery-image

சேவை திட்டம்-27 இன்று காலை முசிரி லயன்ஸ் சங்கம் சார்பாக சேருகுடி பகுதியில் லயன்.த.அசோக்குமார் தலைமையில் 1000 பணை விதைகள் நடப்பட்டது. விதைகள் உபயம் வழங்கிய லயன். சீனிவாசன். ஸ்ரீ பாலாஜி பெட்ரோல் பங்க்(ஸ்ரீ கிருஷ்ணகுமார் அறக்கட்டளை), திரு. பெரியசாமி நாடார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். விதைகள் நட உறுதுணையாக இருந்த சேருகுடி ஊர் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

gallery-image

2/6/2024 ஞாயிற்று கிழமை அன்று தா.பேட்டை ரோடு லட்சுமி மஹாலில் பணியேற்பு விழா மிகசிறப்பாக நடைபெற்றது. முன்னாள் மாவட்ட ஆளுநர் MJF.LION H.ஷேக்தாவூத் அவர்கள் பொறுப்பாளர்களுக்கு பணி நியமனம் செய்து சிறப்புரையாற்றினார்.

Lion S.Silambarasan

President

+91 995-212-0999

Lion S.Sivagnanam

Secretary

+91 984-250-1133

Lion K.Senthil Kumar

Treasurer

+91 996-579-7180

© 2024 This site is the property of Musiri Lions Club - India